திருநெல்வேலி மாவட்டத்தின புதிய வடிவிலான இணையதளம்

பத்திரிக்கைச் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஜஸ் இ.ஆ.ப 06-07-2018 அன்று முற்றிலும் புதிய வடிவிலான தேசிய தகவலியல் மையம் உருவாக்கிய மாவட்ட இணையதளத்தினை தொடங்கி வைத்தார். அவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த புதிய https://tirunelveli.nic.in இணைய தளமானது பல புதிய வசதிகளை கொண்டுள்ளது, குறிப்பாக மாற்றுத் திறனாளிகளும் எளிதில் உபயோகபடுத்தும் வழியில் அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இணையதளத்திலுள்ள விபரங்களை அதனுடைய அளவுகளை கூட்டியோ, குறைத்தோ பார்த்துக் கொள்ளலாம். இணைய தளத்தின் நிறத்தை முற்றிலும் வேறு நிறத்திற்கு மாற்றியும் எளிதில் பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஒலி வடிவத்திலும் இந்த இணையதளத்தினை கேட்டுக் கொள்ளவும் வசதியுள்ளது. இரு மொழிகளில் வெளியிடப்படும் இந்த இணைய தளத்தில் இனி ஆங்கிலம் மற்றும் தமிழிலும் செய்திகள் வெளியிடப்படும். மேலும் கணினியில் மட்டுமல்லாது கைபேசி, ஐபேட் போன்ற பல்வேறு மின்னனு சாதனங்களிலும் எளிதில் இந்த புதிய இணையதளத்தினை பார்த்துக் கொள்ளலாம் என்ற விபரங்களை தெரிவித்தார்

 

 

Photo Gallery