அரியலூர் மாவட்டத்தில் நவீன தகவல் தொழில்நுட்ப மாவட்ட வலைதளம் துவக்கம்

நவீன தகவல் தொழில்நுட்ப மாவட்ட வலைதளம்

அரியலூர் மாவட்டத்தில் https://ariyalur.nic.in என்ற நவீன தகவல் தொழில்நுட்ப மாவட்ட வலைதளம் (District Website), 23.05.2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் ஸ்மார்ட் போன், டேப்ளட், லேப்டாப், கணினி உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறைகளின் விவரங்களும், செயல்பாடுகளும் இவ்வலைதளத்தின் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வலைதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் அரசுத்துறைகளின் தங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளுவதற்கு சிறப்பாக புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளம், GIGW (இந்திய அரசாங்க வலைதளங்களுக்கான வழிகாட்டுதல்கள்) யின் அணுகல் இணக்கத்திற்குடன் STQC யினால் சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பின் அடிப்படையிலானது மற்றும் NIC யின் பாதுகாப்பான மேகம் (secure cloud) வழி வழங்கப்படுகிறது.

மேலும், அரியலூர் மாவட்டம் குறித்து அனைத்து பொது தகவல்கள், வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை போன்ற பல்வேறு துறைகளில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் இடங்களில் இருந்தே தங்களுக்கு தேவையான அரசுத் துறையின் சேவைகளையும், விவரங்களையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் தினந்தோறும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வெளியிடப்படும் மாவட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களை காண முடியும்.

மாவட்ட வலைதள தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இஆப., அவர்கள், குறுகிய காலத்தில் இந்த இலக்கினை அடைந்ததற்காக அரியலூர் தேசிய தகவலியல் மைய அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஜி.கே.லோகேஷ்வரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) பாலாஜி, மாவட்ட தகவலியல் அலுவலர் எஸ்.ஜான்பிரிட்டோ, கூடுதல் மாவட்ட தகவலியல் அலுவலர் கே.டேவிட் ஜோசப் ராஜ், மின் மாவட்ட மேலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனார்.

Photo Gallery