கரூர் மாவட்ட மேம்படுத்தப்பட்ட இரு-மொழி வலைத்தளம்

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் புதிதாக மேம்படுத்தப்பட்ட இரு-மொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ்) வலைத்தளம் https://karur.nic.in, S3WaaS அடிப்படையில் மே 28, 2018 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்திலேயே மூன்றாவதாக மறுசீரமைக்கபட்ட தளமாக தொடங்கப்பட்ட இத்தளமானது, GIGW (இந்திய அரசாங்க வலைதளங்களுக்கான வழிகாட்டுதல்கள்) யின் அணுகல் இணக்கத்திற்குடன் STQC யினால் சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பின் அடிப்படையிலானது மற்றும் NIC யின் பாதுகாப்பான மேகம் (secure cloud) வழி வழங்கப்படுகிறது.

இந்த தளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இத்தளமானது புது டெல்லி மற்றும் சென்னையிலுள்ள என்.ஐ.சி S3WaaS குழுவின் வழிகாட்டுதலின்படி கரூர் மாவட்ட என்.ஐ.சி அலுவலர்களால் உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.சூர்ய பிரகாஷ், துணை ஆட்சியர்(ச.பா.தி), ஆதி திராவிட நல அலுவலர், மாவட்ட தகவலியல் அலுவலர் ஆர்.கண்ணன், கூடுதல் தகவலியல் அலுவலர் ஏ.மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Photo Gallery